Article 1
N.சிவராமகிருஷ்ணன்,தஞ்சாவூர்

SUBUDU – Critic

 
கர்நாடக இசையுலகில் சுப்புடு எனும் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இசைக் கலைஞர்கள் சற்று அதிர்ந்துதான் போவார்கள். அந்த அளவுக்கு அவருடைய எழுத்துக்கள் கூர்மையாகவும், கடுமையாகவும் இருக்கும். சில நேரங்களில் இவர் விமர்சனம் கலைஞர்களை மெல்ல வருடுவதாகவும், பல நேரங்களில் சொல்லால் அடிப்பது போலவும் இருக்கும். இவருடைய விமர்சனம் இசையுலகில் பெரிதும் பேசப்பட்டது என்பது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல. இவருடைய விமர்சனங்களால் இசை மேலும் புத்துயிர் பெற்றது என்றுகூட சொல்லலாம்.
 
கலை, இசை விமர்சகர்களில் சுப்புடு அளவுக்கு எதிர்ப்பைச் சந்தித்தாரும் இல்லை. அன்பைப் பெற்றாரும் இல்லை. யார், எவர் என்ற பாகுபாடு பார்க்காமல், பாரம்பரிய இசைக்கும். நடனத்துக்கும் சிறுதுளி பங்கம் நிகழ்வதாக உணர்ந்தாலும் பிய்த்து தொங்கப்போட்டுவிடுவார். பாடுவதற்கு முன் அவரைச் சந்தித்து, மாலை அணிவித்து ஆசிபெற்று மேடையேறுபவர்களும் உண்டு. சுப்புடு நிகழ்ச்சிக்கே வரக் கூடாது என அரங்குக்கு முன்பு ஆள்போட்டு வேவு பார்த்த கலைஞர்களும் உண்டு. விமர்சனச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த சுப்புடுவுக்கு இது 100வது ஆண்டு.
 
இவர் புது டெல்லியில் தனது பணியைத் தொடங்கினார். மத்திய அரசில் ஒரு சாதாரண வேலை கிடைத்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இவர் சென்று வருவது வாடிக்கையாக இருந்தது. சாதாரணமாக இதர விமர்சர்கள் எழுதும் பணியில் இவரது விமர்சனங்கள் அமைவதில்லை. ஒவ்வொன்றிலும் ஏதேனும் குத்தல் இருக்கும். சில நேரங்களில் இவரது சொற்கள் வித்வான்கள் மனங்களைப் புண்படச் செய்து விடும். இவரது விமர்சனம் புதுமையாக இருந்த காரணத்தினாலோ என்னவோ, அல்லது மக்கள் அதைப் படித்துச் சுவைத்தார்கள் என்பதாலோ இவருக்கு ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்ந்து விமர்சனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய விமர்சன தடம் ஆனந்த விகடனும் கல்கியும் தான்.
 
சுப்புடு தனக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டது எழுத்தாளர் கல்கியை. ஆனாலும், அவருக்கே உரித்தான பகடியும், மிக நுணுக்கமான விவரணைகளும், அசைக்க முடியாத நம்பிக்கையோடு அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் பெரும் தனித்தன்மையை உருவாக்கிவிட்டன. ஓர் இசை விமர்சகராக, யாரையும் அவர் எதிரியாகக் கருதியதில்லை. நண்பராகவும் எண்ணியதில்லை. பாலமுரளிகிருஷ்ணா பரீட்சார்த்தமாக உருவாக்கிய புதிய ராகங்களில் எவ்வித டெப்த்தும் இல்லை. இது தேவையற்ற வேலை என எழுதினார். பாலமுரளிக்குக் கடுங்கோபம். ஆனால், ஒருகட்டத்தில் சுப்புடுவின் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு அவரின் நெருங்கிய நண்பரானார்.
 
 
வாரத்துக்கு நான்கு மிரட்டல் கடிதங்கள் வரும். ஏன்… மத்தவாளை ஹர்ட் பண்ற மாதிரி எழுதுறேள். கொஞ்சம் மென்மையாதான் எழுதுங்களேன்… என்று மனைவி சந்திரா சொல்வதைப் புன்னகையோடு வாங்கி, காதில் போட்டுக்கொள்வார். ஆனால் பேனா வளையாது. எடுத்ததுமே ஈட்டிதான். சென்னை மியூஸிக் அகாடமி பற்றி “அக்ரஹாரமா, மியூஸிக் அகாடமியா?” என தலைப்புவைத்து ஒரு கட்டுரை எழுதப் போக, சுப்புடுவுக்கு இங்கே அனுமதியில்லை என அகடாமி வாசலில் போர்டே வைத்துவிட்டார்கள். ஆனால் வெளியே, சுப்புடுவுக்கு அவருடைய ரசிகர்கள் வரவேற்பு போஸ்டர் ஒட்டியது வேறு கதை.
 
சுப்புடுவை நிராகரிக்க முடியாததற்குக் காரணம், அவரின் புலமை. அவர் முறைப்படி இசை கற்றவர் அல்லர். ஆனால், இசையைப் பற்றி அவர் அறியாதது எதுவும் இல்லை. சுப்புடுவின் சகோதரிகள் ராஜலட்சுமியும் பட்டம்மாளும் பாடகிகள். ரங்கூனில் கிருஷ்ணமூர்த்தி பாகவதரிடம் இரண்டு பேரும் பாட்டுக் கற்றுக்கொள்ளும்போது, சுப்புடுவுக்கு 10 வயது. அருகில் அமர்ந்து உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருப்பார். ராஜலட்சுமி சற்றுப் பிழை செய்தாலும், ராஜி தாளம் இழுக்குது எனச் சொல்லிச் சரி செய்வாராம். அந்த அளவுக்குப் பிறவி ஞானம்.
 
பாடி வெங்கட்ராம சுப்பிரமணியன்… இதுதான் சுப்புடுவின் முழுப்பெயர் அவரின் பூர்வீகம், அம்பத்தூர் அருகிலிருக்கும் பாடி. தாத்தா காலத்திலேயே பர்மாவில் செட்டிலாகிவிட்டது சுப்புடுவின் குடும்பம். அப்பா வெங்கட்ராம அய்யர் பிராஞ்ச் கிளார்க்காக பர்மா அரசாங்கத்தில் வேலை செய்தார். தமிழிசை மீது தீராத பற்றுக்கொண்டவர். சுப்புடுவின் அம்மா பெயர் சரஸ்வதி. சுப்புடுவோடு சேர்த்து ஏழு பிள்ளைகள். 27.3.1917-ல் சென்னை மண்ணடியில் பிறந்தார் சுப்புடு. படித்தது வளர்ந்தது எல்லாம் ரங்கூனில்தான்.
 
சுப்புடுவைக் கலை, இசை விமர்சகராகத்தான் பலர் அறிந்திருக்கிறார்கள். தேர்ந்த பலகுரல் கலைஞர் அவர். நாடக நடிகர், இயக்குநர், சௌத் இந்தியன் தியேட்டர் என்ற நாடகக் குழுவையும் நடத்திவந்தார். ‘வானொலி’ நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
 
சுப்புடு எழுதிய முதல் விமர்சனம் ‘கல்கி’ இதழில் வெளியாகிறது ஆனால், அவருடைய பெயர் இடம்பெறவில்லை. தமிழகத்திலிருந்து ரங்கூனுக்கு வந்திருந்த ஓர் இசைக்குழுவைப் பற்றிய விமர்சனம் அது. பெயர் இடம் பெறாததைச் சொல்லி சகோதரர்கள் கேலிபேச, நான் எழுதிய விமர்சனத்தை ‘கல்கி” ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் நான் எழுதியது சரிதான். தொடர்ந்து எழுதுவேன் எனக் கூறி அடுத்தடுத்து எழுதி அனுப்ப, மூன்றாவது முறை ‘சுப்புடு’ எனப் பெயர் இடம்பெற்றது. அதன் பிறகு அந்தப் பெயர் ஓர் அடையாளமாகவே மாறிவிட்டது.
 
 இவருடைய எழுத்தில் விமர்சனத்தைவிட கேலியும் நையாண்டியும் மிகுந்திருக்கும். தாட்சண்யம் இல்லாமல் விமர்சித்து விடுவார். இவர் பாராட்டும்போது ஆகா ஒகோ என்பார்கள். சில பெரிய கலைஞர்கள் இவரோடு காட்டா குஸ்தி போடாதுதான் குறை. திருவையாற்றில் இவரை சூழ்ந்து கொண்ட இசைக் கலைஞர்கள் இந்த வயதான மனிதனைத் தாக்கி சட்டையையும் கிழித்து விட்டனர். இதையெல்லாம் அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தன் தொழிலில் கவனமாக இருந்து வந்தார். உண்மையான விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும்? நிறைகளைப் பாராட்டுகின்ற அதே நேரத்தில் குறைகளையும் அழுத்தமாகச் சுட்டிக் காட்ட வேண்டும். அதைச் சற்று கடுமையாகவும் குத்தலாகவும் எழுதியதுதான் வம்பு.
 
சபா கச்சேரிகளில் இசைக் கலைஞர்கள் பாடுவது சரியாக இல்லை என்று இவர் உணர்ந்தால் அந்த சபாவின் நிர்வாகிகளையும் இவர் விட்டு வைக்கவில்லை. உண்மையோ, பொய்யோ, ஒரு சபாவில் இவரை உள்ளே விடுவதற்கு எதிர்ப்பினை எழுதி வைத்திருந்தார்களாம். இவரால் விமர்சனம் செய்யப்பட்டு அதிகம் புண்பட்டவர்களில் செம்மங்குடி சீனிவாசய்யரைச் சொல்லலாம். இவ்விருவரும் சொல்லால் அடித்துக் கொண்டார்களே தவிர நல்ல காலம் கல்லால் அடித்துக் கொள்ளவில்லை.
 
1980 ஆம் ஆண்டிலிருந்து, தொடர்ந்து டிசம்பர் சீஸனுக்கு சென்னை வந்துவிடுவார் சுப்புடு. மூன்று வேளைக் கச்சேரிகளில் ஒன்றையும் தவறவிட மாட்டார். சிறப்போ இழப்போ… வர்ணம் தொடங்கி மங்களம் வரைக்கும் முழுமையாகக் கேட்பார். கையில் ஒரு பேப்பர், பேனா இருக்காது… கண்களை மூடிக்கொண்டு லயித்துக் கேட்பார். அப்படியே மனதில் பதிந்துபோகும். எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டு, இரவு 10 மணிக்கு அறைக்குத் திரும்புவார். அரை மணி நேரம் ஓய்வு.
 
பிறகு, படுத்துக்கொண்டே தன் உதவியாளர் சுப்பிரமணியனிடம் டிக்டேட் பண்ணத் தொடங்கிவிடுவார். 12 மணிக்கு விமர்சனக் கட்டுரை தயாராகி, பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றுவிடும். அவருடைய விமர்சனத்துக்குப் பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு பத்திரிகைகள் காத்திருந்த காலம் உண்டு.
 
மிகுந்த நகைச்சுவை உணர்வுகொண்டவர் சுப்புடு. அதனால், அவரைச் சுற்றி எப்போது 10 பேர் இருப்பார்கள். பைத்தியத்தைச் சுற்றிப் பத்துப் பேரு இருக்கிற மாதிரி என்னைச் சுத்தியும் 10 பேர் இருக்காங்க எனச் சிரிப்பார் சுப்புடு. கேன்டீன், பூங்கா என எங்கே போனாலும் பலருக்கு மத்தியில் தான் அவர் இருப்பார்.
 
சிறு வயதிலேயே அவருக்கு இசைப்புலமை இருந்தது. எந்தச் சமரசத்துக்கும் ஆட்படாமல் ஒரு சவால் மிகுந்த மனிதனாகவே கடைசிக்காலம் வரை வாழ்ந்துவிட்டும் போயிருக்கிறார் சுப்புடு.
 
எங்கள் குடும்பத்தில் பலரும் பல பெரிய அரசுப் பணிகளில் இருந்திருக்கிறார்கள், ஆனாலும், எங்களுக்குத் தனி அடையாளம் ஏதுமில்லை. சுப்புடு குடும்பம் என்பதே எங்களுக்குமான அடையாளம் எனப் பெருமிதமாகச் சொல்கிறார் சுப்புடுவின் சகோதரா கிருஷ்ணமூர்த்தி,
 
தவறுகளைக் கடுமையாகச் சுட்டிக்காட்டும் வேகம், நல்லவற்றைப் பாராட்டுவதிலும் இருக்கும். அதுதான் சுப்புடுவின் நேர்மை, மதியக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, உன்னிகிருஷ்ணன், விஜய் சிவா மற்றும் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் போன்ற பலரையும் அந்தத் தருணத்திலேயே அடையாளம் கண்டு, இவர்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது என எழுதினார் இன்று அவர்கள் உச்சத்தில் இருக்கிறார்கள்.
 
நான் விமர்சனம் எழுதிய பிறகு, பாட்டு ஞாபகம் வரக் கூடாது. என் விமர்சனம்தான் ஞாபகம் வர வேண்டும் என்பதுதான் சுப்புடுவின் பாலிசி. இறுதி வரை தனக்குச் சரி எனப் பட்டதை விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் எழுதினார். எழுதியது தவறு எனச் சுட்டிக்காட்டினால், அதை ஏற்றுக்கொள்ளவும் அவர் தயங்கியதில்லை.
 
உடல் நலம் குன்றி டெல்லியில் இருந்தார் சுப்புடு. அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் போய் சந்தித்து நலம் விசாரித்தார். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார் அப்துல்கலாம். நான் இறந்த பிறகு, உங்கள் மொகல் தோட்டத்தில் இருந்து ஒரு மஞ்சள் ரோஜாவைக் கொண்டு வந்து என் உடல் மீது வையுங்கள் போதும்… எனச் சிரித்தார் சுப்புடு. 90வது பிறந்தநாளைக் கொண்டாடிய சுப்புடு, அதற்கு அடுத்த இரண்டாவது நாளில், அதாவது 29.3.2007 அன்று மாலை 7 மணிக்குக் காலமானார். நள்ளிரவு 12.30 மணிக்கு மொகல் தோட்டத்தில் பறிக்கப்பட்ட மஞ்சள் ரோஜாக் கொத்தை சுப்புடுவின் உடல் மேல் வைத்து அஞ்சலி செலுத்தினார் அப்துல்கலாம்.
 
சுப்புடுவின் எழுத்து பலருக்கு வெளிச்சம் தந்திருக்கிறது. செதுக்கியிருக்கிறது. அவர் பாராட்டிய, அடையாளம் காட்டிய பலர் இன்று உச்சத்தில் பலரைச் இருக்கிறார்கள். ஆனால், சுப்புடுவின் நூற்றாண்டு பற்றி எவரும் வாய் திறக்கவில்லை. குறைந்தபட்சம் ஓர் அரங்க நிகழ்வைக்கூட முன்னெடுக்கவில்லை. அவரின் குடும்பத்தினரே வரும் மே 12ஆம் தேதி டெல்லியில் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காலம் முழுவதும் கைநோக எழுதிக் கலைகாத்த, கலைஞர்களைச் செப்பனிட்ட ஒருவருக்கு நேர்ந்த பெரும் துயர் இது!
 
ஆனால் தஞ்சாவூர் தியாகபிரம்ம சபா 24.06.2017 அன்று இவருக்கு ஒரு விழா எடுத்து அவரை பற்றி இசை உலகுக்கு வெளிகொணர்ந்தது பாராட்டுக்குறியது.
 
Article 2
ஸ்ரீமத் ராமானுஜர் – 1000
 
தஞ்சாவூர்ஸ்ரீதியாகபிரம்ம சபாவில் நடைபெற்ற ஸ்ரீராமானுஜர் நினைவு இசை
 
நிகழ்ச்சியின் போது ஆற்றிய உரை
 
உரையாற்றியவர் : தஞ்சை வெ.கோபாலன், துணைத்தலைவர், ஸ்ரீ தியாகபிரம்ம சபா, தஞ்சாவூர்
 
நமது பாரத தேசத்தில் எத்தனையோ மகானுபாவர்கள் தோன்றி, செயற்கரிய சாதனைகளைப் புரிந்து மனிதகுல வரலாற்றில் அழியாத இடம் பெற்றுச் சென்றிருக்கின்றனர். மனித சமுதாயம் மேம்படவும், ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டு நமது புராதன வேத வேதாந்தங்களுக்குப் புத்துயிர் ஊட்டி புதுமை கண்ட ஆன்மீகப் பெரியோர்கள் பலர் அத்தகைய மகான்களாக இந்த பூமியில் அவதரித்திருக்கின்றனர். நமது பாரத் சமுதாயத்தில் சமூக நியதி என்பதும் ஆன்மிக நியதி என்பதும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் பயணிக்கக் கூடியவை. அப்படி ஆன்மிகப் புரட்சி செய்த முப்பெரும் ஆச்சார்யார்களை நாம் வணங்கி புனிதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சங்கரர், ராமானுஜர், மாத்வாச்சாரியார் ஆகியோர். வேதாந்த விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர் ராமானுஜர். இவர் பிறந்த ஆண்டில் வரலாற்றறிஞர்கள் சில வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். இவர் பிறந்த ஆண்டு 1017 என்று தெரிகிறது. ஆனால் அதற்கும் பின்னால் 20 முதல் 60 ஆண்டுகள் கழித்து இவர் பிறந்திருக்க வேண்டுமென்கிற கருத்தும் உண்டு.
 
இவர்களில் இராமானுஜர் பிறந்து ஆயிரமாவது ஆண்டினை இப்போது நாம் உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக அவர் தோன்றிய இந்த புண்ணிய பூமியான தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். அவருடைய சித்தாந்தத்தின் சாரத்தை விரிவாகத் தெரிந்து கொள்ள பல வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன, எனினும் அவருடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும், அவர் வாழ்க்கையின் நோக்கத்தையும் அதில் அவர் பெற்ற வெற்றி தோல்விகள் பற்றியும் ஒரு சிறிது இந்த ஆயிரமாவது ஆண்டில் தெரிந்து கொள்வது வைணவத்தின் அரிச்சுவடியைப் படித்துத் தெரிந்து கொள்வது போலத்தான். எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டும். அப்படி இராமானுஜரைத் தெரிந்து கொள்ள ஒரு தொடக்கமாக இந்த நிகழ்ச்சி அமைய வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.
 
இனி ஸ்ரீ ராமானுனுர் பற்றிய வரலாற்றுச் செய்திகளைப் பார்க்கலாம். அவர் வாழ்க்கை வரலாறு நீண்ட நெடிய வரலாறு என்பதால் இங்கு அதன் முக்கியமான சில பகுதிகளை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். சென்னை காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் ஸ்ரீ பெரும்புதூர் எனும் திவ்ய ஷேத்ரம் இருக்கிறது. அங்கு 1017 ஆம் வருஷத்துக்குச் சரியான பிங்கள வருஷம் சித்திரை மாதம் சுக்ல பஞ்சமி
 
 திதி, வியாழன் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆசூரி கேசவ சோமயாஜி என்பவருக்கும் காந்திமதி எனும் அம்மையாருக்கு மகவாகப் பிறந்தவர் ஸ்ரீராமானுஜர்.
 
ஸ்ரீபெரும்புதூரில் வளர்ந்து வந்த ராமானுஜர் முதலில் தம் தந்தை வேத வேதாந்தங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அவருடைய அசாத்தியமான அறிவுக் கூர்மையாலும், மனத்திட்பத்தினாலும் தனது 15ஆம் வயதிற்குள் வேத, வேதாந்தங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். அப்போதைய வழக்கப்படி அவருக்கு பதினாறு வயதிலேயே தஞ்சமாம்பாள் எனும் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்கள். இளம் வயதிலேயே ராமானுஜர் தன் தந்தையை இழந்தார்.
 
தந்தையை இழந்ததால் ஒரு குருவை நாடினார். காஞ்சிக்கு அருகில் இருந்த திருப்புட்குழி எனும் ஊரில் யாதவப் பிரகாசர் எனும் சந்நியாசி இருப்பதாக அறிந்து அவரிடம் சென்றார். சாஸ்திர ஞானம் அதிகம் படைத்திருந்த யாதவப் பிரகாசருக்கும் சீடராகச் சேர்ந்த ராமானுஜருக்கும் தொடக்கத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. “ஸத்யம், ஞானம் அனந்தம் பிரம்ம்” எனும் உபநிஷத் வாக்கியத்துக்குப் பொருள் சொல்வதில் குருவுக்கும் சீடனுக்கும் கடுமையான மோதல் நிகழ்ந்தது. அதையொட்டி ராமானுஜரை குருவான யாதவப் பிரகாசர் விரட்டி விட்டார். விரட்டியதோடு அவரைத் தீர்த்துக் கட்டவும் திட்டமிட்டார். அதற்காக காசி யாத்திரை செல்ல ஏற்பாடுகள் நடந்தன. காசி யாத்திரையின் போது ராமானுஜர் உயிருக்கு ஆபத்து என்பதை உடன் இருந்த மாணவர் சொல்ல அவர் அங்கிருந்து தப்பித்து காஞ்சிமாநகர் சென்றுவிட்டார்.
 
அங்கு தாயின் ஆணையின்படி திருக்கச்சி நம்பியைச் சந்தித்து அவரிடம் சீடனாகச் சேர அனுமதி கேட்கிறார். அவரிடம் இருந்து கொண்டு வரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன கைங்கர்யம் செய்யும் பணியில் ஈடுபடலானார். அங்கு ஒரு நாள் எதேச்சையாக குருநாதர் யாதவப் பிரகாசரைக் காண நேர்ந்தது. அவர் அழைப்பின் பேரில் மீண்டும் அவரிடம் சேர்ந்தார். இதற்கிடையே திருவரங்கத்தில் இருந்த ஸ்ரீ ஆளவந்தார் எனும் மகா ஞானி ராமானுஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண காஞ்சிபுரம் வந்தார். அங்கு அவர் திருக்கச்சி நம்பியைச் சந்திக்கிறார். அங்குதான் ஆளவந்தார் முதன் முதலில் ராமானுஜரைப் பார்த்து, அவர் பெருமைகளை மானசீகமாக உணர்ந்து கொண்டார். வைணவ சம்பிரதாயாத்தை வளர்க்க ஒரு அடியார் இவர்தான் என்று ஆளவந்தாருக்கு ராமானுஜரைப் பார்த்த உடனே மனதில் தோன்றிவிட்டது.
 
சந்தர்ப்ப வசத்தால் யாதவப் பிரகாசர் ராமானுஜரை வெறுத்து அவரைத் தன் சீடர்கள் கூட்டத்திலிருந்து துரத்தி விட்டார். பின்னர் தாயின் ஆணைப்படி மறுபடியும் காஞ்சி திருக்கச்சி நம்பியிடம் திருமஞ்சனப் பணிக்குச் சேர்ந்தார்.
 
 இதற்கிடையில் திருவரங்கத்தில் ஆளவந்தாரின் உடல் நிலை மோசமடைந்தது. ‘இத்தச் செய்தியைக் கேட்டு ராமானுஜர் காஞ்சிபுரத்திலிருந்து ஓடோடி வந்து அவரைப் பார்த்தார். ஆனால் அவர் வந்து பார்க்கும்போது யமுனாச்சார்யார் எனும் ஆளவந்தாரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரைக் காண வந்தவர் ஆளவந்தாரின் இறந்து போன உடலின் கையில் மூன்று விரல்கள் மட்டும் மடியாமல் நீண்டே இருந்ததைக் கண்டார். அதற்கு என்ன காரணம் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அந்த நிலையில் ராமானுஜர் மூன்று பிரமாணங்களை எடுத்துச் சொல்ல, ஆளவந்தாரின் கை விரல்கள் மடிந்து கொண்டன. அவர் என்ன பிரமாணங்களைச் சொன்னார், அவற்றின் பொருள் என்ன என்பதையெல்லாம் சொல்லி விளங்க வைக்க ஆன்றோர் பெருமக்கள்தான் வரவேண்டும். அதற்கான விளக்கங்களை அவர்கள் நாள் கணக்கிலும் சொல்ல நேரிடலாம் எனினும் இங்கு அதன் பெயர்களை மட்டும் சொல்லி ஆறுதல் கொள்வோம். அவை :-
 
1. 2 பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை வலியுறுத்தி ஒரு உரை எழுதுவது. விஷ்ணு புராணம் எழுதிய பராசர முனிவர் பாகவதம் இயற்றிய
 
வேத வியாசர் ஆகிய பெரியோர்களின் புகழை உலகுக்கு விளக்குவது. வேதம் அழகுத் தமிழில் பாசுரமாக ஆக்கிய நம்மாழ்வாரின் பெயரை 3. உலகெங்கும் போற்றிப் பரப்புவது ஆகிய மூன்றும்தான்.
 
இந்த மூன்று அம்சங்களையும் ராமானுஜர் அன்று எடுத்துக் கொண்ட
 
பிரதிக்ஞயின் படி தன் வாழ்நாளில் செய்து முடித்தார்.
 
யமுனாச்சாரியாரின் வைணவ தத்துவங்களைக் கற்றுக் கொள்வதற்காக அல்லவோ அவர் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் ஓடி வந்தார். அதற்காக அவர் பல காலம் தவமிருந்தார். குருநாதரின் ஐந்து சீடர்களில் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரிடம் “எட்டெழுத்து மந்திரம்” எனச் சொல்லப்படும் ஒம் நமோ நாராயணா என்பதை எவரிமும் வெளியிடுவதில்லை என்று பிரமாணம் செய்த பின் உபதேசம் பெற்றுக் கொண்டார். அப்படி உபதேசம் பெற்றுக் கொண்ட மந்திரத்தை அவர் மட்டுமே உச்சரித்துப் புண்ணியம் அடையவேண்டுமென்பதை காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர் என்ன செய்தார் தெரியுமா? அந்த மந்திரோபதேசம் ஆன கையோடு நேராக திருக்கோஷ்யூர் ஆலய கோபுரத்தின் மீதேறி மக்கள் அனைவரும் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்து கரையேற வேண்டுமென்பதற்காக உரக்க எல்லோருக்கும் அதனை உபதேசம் செய்தார்.
 
இந்த செயலால் மிகுந்த கோபம் அடைந்த திருக்கோஷ்டியூர் நம்பி அந்த ரகசியமான மந்திரத்தை இப்படி எல்லோருக்கும் உபதேசம் செய்வதென்பது குருத் துரோகம் என்றும், அதன் விளைவால், அவர் நரகத்துக்குச் செல்ல நேரும் என்பதை எடுத்துச் சொன்னார். அதற்கு ராமானுஜர் மக்கள் அனைவரும் முக்தியடைவதானால் தான் மட்டும் நரகம் புகுவதில் தப்பில்லை என்று வாதிட்டார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பி வருந்தினாரெனினும் குருவின் பக்தியைக் காட்டிலும் சீடனின்
  
பக்தி விஞ்சியிருப்பது கண்டு மகிழ்ந்து அவரை “எம்பெருமானார்” என்று சொல்லி ‘ ஆலிங்கனம் செய்து கொண்டார்.
 
இராமானுஜர் சிறந்த வேதாந்தி மட்டுமல்ல நல்ல நிர்வாகியும் கூட ஸ்ரீரங்கத்தில் ஆலய நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. அவர் கையில் எடுத்துக் கொண்டு, அதனை மர் ஸ்ரீரங்க ஆலயத்தின் நிர்வாகத்தைக் செம்மைப்படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய பூஜா விதிமுறைகளை ஒழுங்கு படுத்தி அனைத்தையும் சீர்செய்தார். இப்படி ஒழுங்கும், கட்டுப்பாடும் நடைமுறைப்படுத்தப் படுமானால் எதிர்ப்புகள் வருவதென்பது எதிர்பார்க்கக் கூடியது அல்லவா? அதன்படியே அவருக்கு எதிர்ப்புகளும் வந்தன. பெரும் செல்வம் புரளும் ஆலயத்தின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது அங்கு தேட்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் சும்மா இருப்பார்களா? இவரைக் கொல்லுவதற்குக் கூட முயற்சிகள் நடந்தன. ஸ்ரீ வைணவ சம்பிரதாய நடைமுறைகளை உருவாக்கி, அவற்றை உரிய முறையில் பழக்கங்களையும் அவற்றின் பலன்களையும் அனைவரும் உணரும் வண்ணம் உயிர் கொடுத்து உருவாக்கியவர் இராமானுஜர். இதுபோன்ற பழமைகளை மாற்றி புதுமையான, சீரான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வரும் போது அவரைப் போலவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா? அப்படி ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் என்ன செய்ய முடியும். அதிகமான வேலை பளுவைத் தானே ஏற்றுக் கொள்ள நேரிடும். அப்படித்தான் நேர்ந்தது அவருக்கு, ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் தவிர ஸ்ரீவைணவ மடத்தின் நிர்வாகமும் இவருடைய நேரடிப் பார்வையில் நடைபெற வேண்டியிருந்தது. ஸ்ரீரங்கம் கோயில் ரங்கநாதப் பெருமாளின் உடைமைகள் ஏராளம். அவைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கேட்பாரற்றும், மதிப்பாரற்றும் மறைந்தும், ஒளிந்தும் இருந்தவற்றை அவர் மீட்டெடுத்து ஒழுங்கு படுத்திச் சிறப்பாக நிர்வாகம் செய்தமையால் இவரை “உடையவர்” என்று அழைத்தனர். இப்போது ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் சந்நிதியில் உடையவர் சந்நிதி என்றிருப்பதைக் காணலாம்.
 
பெருமை மிகு பாரத தேசம் முழுவதும் தல யாத்திரை செய்து அங்கெல்லாம் இவர் வைணவத்தைப் பரப்பினார். அவர் வாழ்ந்த காலம் சமயப் பிரிவுகளிடையே வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்று வந்த காலம். சைவ, வைணவ மோதல்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. இவர் போகுமிடங்களில் எல்லாம் வாதங்களும் எதிர்வாதங்களும் நடைபெற்றன. போகுமிடங்களில் எல்லாம் ஆங்காங்கே வைணவ மடங்களை இவர் நிறுவினார்.
 
ஆன்மீக மடங்களைப் பெரும்பாலும் துறவிகளே நிர்வகித்துக் கொண்டிருந்த காலத்தில் இவர் தான் தொடங்கிய ஆன்மிக மடங்களில் தலைமைப் பொறுப்பை இல்லறத்தில் இருந்தவர்களையும் தலைவர்களாக நியமித்தார். மடங்களின் அதிபதிகளாக வருபவர்களுக்கான தகுதிகளை முறைப்படுத்தினார். எல்லா குலத்தாரையும் ஏற்றத் தாழ்வின்றி பரிவு ஆகிய குணங்களை வெளிப்படுத்தி அவர்களை
  
திருக்குலத்தார்’ என்ற பெயர் சொல்லி அழைத்து மரியாதையாக நடத்தினார். இவர் திருக்குலம் என்ற பெயரை அளித்ததன் அடிப்படையில்தான் மகாத்மா காந்தியடிகளும் இவர்களை திருமாலின் மக்கள் எனும் பொருவில் “ஹரிஜன்” என்ற பெயர் சூட்டினார்.
 
வைணவன் என்பான் யார்? எனும் கேள்விக்கு இவர் அருமையான பதிலைச் கொடுத்தார். தமிழில் இறை வணக்கங்களுக்கு உரித்தான பிரபந்தங்களைப் பாடித் ததிப்புது வைணவச் சின்னங்களை நெற்றியிலும், உடலிலும் தரிப்பது இப்படி வைணவ சித்தாந்தங்களில் நம்பிக்கையும் புற ஒழுக்கங்களில் வழிமுறைகளைப் பின்பற்றியும் இருப்பவர் யாரோ அவர்களே வைணவர்கள். அவர்கள் எந்தச் சாதியைச் சாந்தவராயினும் இந்த குணங்களை, பழக்கங்களைக் கைக்கொள்பவர் எவரும் வைணவர்களே என்று இவர் பிரகடனப் படுத்தினார்.
 
சமஸ்கிருத மொழியில் இராமானுஜர் இயற்றியுள்ள ஸ்ரீ பாஷ்யம் என்பது அவருடைய தலைசிறந்த போற்றுதலுக்குரிய படைப்பு. தத்துவார்த்தங்களில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய நூல். காலங்காலத்துக்கும் அந்த வழி நிலைத்திருக்க வழிகாட்டிய நூல். இதுவே ராமானுஜரை மக்கள் மனங்களில் ஆசனமிட்டு அமரக் காரணமாக இருந்தது.
 
ஸ்ரீ பாஷ்யம் தவிர, உபநிஷத் தத்துவங்களை விளக்கும் “வேதாந்த சங்கிரகம்” எனும் நூலும், “பிரம்ம சூத்திரத்தின்” சுருக்கங்களான “வேதாந்த சாரம்”, “வேதாந்த தீபம்” ஆகியவைகளும் இவர் அளித்துள்ள சமயம் சார்ந்த கொள்கைக் கொடை
 
இவை தவர விசிஷ்டாத்வைத்துக்கு “கீதா பாஷ்யம்” எனும் கீதைக்கான உரை, மக்களின் அன்றாட தேவைகளுக்கான, சடங்குகளுக்கான “நித்ய கிரந்தங்கள்”. கத்யம் எனும் தலைப்பில் பல்வேறு நூல்களையும் இவர் இயற்றியிருக்கிறார். இவர் தமிழில் உரையாற்றி வந்திருக்கிறார்; ஆனால் நூல்களைத் தமிழில் செய்திருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள். ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் காட்டிய பக்திச் சுவை எழிலொழுக இவருடைய உரைகளில் காணப்படுகின்றன.
 
இராமானுஜர் காலத்தில் சோழநாட்டை ஆண்ட குலோத்துங்க மன்னன் தீவிர சைவன். அவனுடைய கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி. இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா எனுமிடத்திலுள்ள மேல்கோட்டை எனப்படும் திருநாராயணபுரத்துக்குச் சென்று அங்கு 12 ஆண்டுகள் வாழ்ந்து வைணவத்தைப் பரப்பியதாக வரலாறு சொல்கிறது.
 
இவர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலம் 120 ஆண்டுகள்.
 
தனது 120ஆம் வயதில் 1137இல் அதாவது பிங்கள வருஷம் மாசி மாதம் வளர்பிறை
 
தசமி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில் சனிக்கிழமை நண்பகலில் ஜீயர் மடத்தில்
 
இவர் பூதவுடல் நீத்து
 
 இராமானுஜரின் திருமேனிகள் மைசூர், திருநாராயணபுரத்தில் “தமர் உகந்த திருமேனி” என்றும், ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த \ திருமேனி” என்றும், ஸ்ரீரங்கத்தில் “தானான திருமேனி” என்றும் அவற்றைச் சொல்கிறார்கள். எனும்
 
மேல்கோட்டை(திருநாராயணபுரம்)யில் இருப்பது தமர் உகந்த திருமேனி, அப்படியென்றால் என்ன பொருள்? தாழ்த்தப்பட்டவர்களைக் (பஞ்சமர்களைக்) கோவிலுக்குள் அழைத்துச் சென்று
 
புரட்சி செய்தது திருநாராயணபுரம் எனும் இத்திருத்தலத்தில்தான். இராமானுஜர் தன் 80 ஆவது வயதில் திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காக அங்கிருந்த சீடர்களிடம் விடைபெற முயன்றார். அவரது சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே எனத் தவித்தார்கள். இது கண்டு துயருற்ற இராமானுஜர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடித்தார். இந்தச் சிலை இராமானுஜர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிலையில் தம் தெய்வீக சக்திகளைப் பாயச்செய்தார். பின்பு சக்தியூட்டிய சிலையை தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். விடைபெறும்போது “நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள் என்று அவர்களை அமைதிப்படுத்தினார். இந்தச்சிலை தமர் உகந்த திருமேனி என்றழைக்கப்படுகிறது. இன்றும் மேல்கோட்டையில் இச்சிலை வழிபடப்படுகிறது.
 
ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்தத் திருமேனி” இராமானுஜரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒருசன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள். சிலைக்கு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுஜர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாறிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.
 
பின்பு இராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை உருவாக்கினார்கள். இராமானுஜர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை “தானுகந்தத் திருமேனி” என்று பெயர் பெற்றது. இதன் பொருள் இராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது.
 
“தானான திருமேனி” மூன்றாவது திருமேனி (இராமானுஜர் பூதஉடல்) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்
Article 3
THE GREATNESS OF MUSIC
 Music is celebrated the world over. Says Addison: “Music, the greatest good that mortals know And all of heaven we have below.”
 
Browning affirms:
 
Dr. T.N.R.
 
Music is the only sensual pleasure without vice, according to Dr.Johnson. Samuel Rogers say “(Music) is the universal tongue.” Madame de Stael says: “Among all the arts, music alonec
 
“There is no greater truth obtainable
 
By Man than comes of music.” John Logan says: “Music’s the medicine of the mind
 
be purely religious.” The Bard of Avon says with aplomb: “In music is such art,
 
Again Killing care and grief of heart.” it is he who declared:
 
“The man that hath no music in himself
 
Is fit for treasons, strategems and spoils.”
 
In fine, music which is divine is matchless. Mahakavi Bharati was, inter alia, a sweet-voiced singer. A passge in His Kuyil PA
 
runs as follows.
 
O creator Brahma, splendorous are your achievements.
 
…yet of all Thy marvels, the creation of nectarean music
 
Is spectacular, Oh immatchable! Heaven e’er expanding and ocean streams
 
Are wonders sure; but behold the marvel,
 
The Song! There is nought on earth to surpass this. Elements mix and fuse to usher in
 
Novelty; Oh, what a wonder it is! But can this be ever rated equal
 
To the sweet concourse of harmonious sounds?”
 
Quoting a Sanskrit adage Bharati reminds us of the original which says sisur Vetthi Vetthi gana vasam pani:” These days Karnatic music as well as Tamil isai stand much neglected. A good musician
 
: “Pasur Vetthi
 
is now a rarity.
 
We should remember that music belongs to the tamasa kala; its practitioner is one who is playing with a venomous adder. He that makes a living out of it and accumulates wealth, will invariably meet with a condign punishment. Sages like Thyaga Brahmam dedicated it wholly, solely and exclusively to God
 
A song, be it known, must be informed by bhakti. A mellifluous kind of singing aimed at an agreeable, well-rounded tone, an even scale from top to bottom, an unbroken legato, a nicety of intonation, an eloquence of phrase and cadence, a purity of vowels and an avoidance of shouting, nasality, harsh or crude sounds, disjointed registers, undue vehemence and any other form of vulgarity: these form not the soul of a song. aria or cantata of the printed or handwritten notes and notations can only
 
The mere provide a melodic skeleton or frame devised by the singer from his own repertoire or ornaments, embellishments, graces, roulades, trills, variations and cadences and so on. It is not an exhibition of vocal virtuosity that is called for. It is bhakti-sheer devotion, that should be the content. Music is both science and art. It is a hard taskmaster. Its cultivation is not easy.
 
Eyeing the hero who looked like a scare-crow, his friend asks: “Did you in this walled city of Madurai
 
Where Tamil was scanned (by scholars great) Plunge into the depths of sweet and beauteous Tamil?
 
Or were you drawn to the orbit of music sevenfold?
 
O Prince, what ails thee?”
 
I repeat that music is bhakti. It must melt the bones of the listener. Such music is Sivan- given. Let us thrive in it and gain at-one-ment with God.
 
Om Tat Sat!
 
சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் T.N. ராமச்சந்திரன்
MANIPRAVALAM IN CARNATIC MUSIC- A GARLAND OF GEMS
 DR. K. UMAMAHESWARI
 
Manipravalam is a form of writing that expounds a musical composition’s aesthetics in Carnatic music. MANI refers to a tamil word which means ruby and PRAVALAM refers to a Sanskrit word which means coral. These two blend to form a picturesque mala of gems. These gems represent combining phrases in different languages in a single sahitya. Melody and Sahitya are the two eyes of a Carnatic Music composition. Manipravalam embellishes these with its harmonious phrases in different languages, thus presenting a musical form that is pleasing. Adaptability to languages is the hallmark. Such is the versatility and uniqueness of carnatic music which distinguishes it from other forms of Indian music.
 
Manipravalam was so enchanting that it was embraced by the Namboodiris to sanskritise Malyalam to form a richer language. Modern Malayalam owes its origin to manipravalam. It also found its way into musical compositions as several vaggeyakaras adopted it to enhance the beauty of the compositions. As the word implies, they are compositions with phrases in two or more languages. As Sanskrit and Tamil blended it was also considered a blend of Aryan and Dravidian culture, in a way bringing about the oneness.
 
Manipravalam has certain standards. There was a contemporary tamil literary poetic tradition by name Paatu. It is said that Manipravalam derives inspiration from Paatu, with some distinguishing features. This finds mention in a grammar text called Leelanthakam which also highly recommends the kind of words that blend harmoniously. It prescribes proper grammar and prosody and is not left to the composer’s imaginations completely.
 
Tamil is said to be an independent language unlike Malayalam. It has its own era since way back from sangam period. Though Tamil remained independent, it however embraced Manipravalam, inspired by the beauty of the lyrics which emanated from the synthesis. The Azhwars of the Vaishnavite sect were known to be proficient in both Tamil and Sanskrit. They were scholars in Tamil Prabandhams as much as they were in Vedas scripted in Sanskrit. So they were the ones who were most competent to comprehend the beauty of Maniparavalam. This became their mode of extensive teachings, preachings and writings. Thus came the unique style called manipravalam in writing, with both Tamil and Sanskrit blended. Such texts became simpler to understand than the Vedas which were found to be difficult. A well known Manipravalam text is Rahasya traya saaram of Vedanta Desikan.
 
Composers of carnatic music have enjoyed using Manipravalam in their musical compositions. A single musical composition blended in different languages is not an easy task even if one is well versed in multiple languages. But these great composers did this with great finesse.
 
Muthuswamy Dikshitar, Sathguru Thyagarjar, H.H Swathi Thirunal, Papanasam Sivan were some of the composers who have employed Manipravalam in their compositions. All of them are aesthetically well blended and adhering to rules of grammar that have been prescribed.
 
Muthuswamy Dikshithar This eminent composer belonging to the Trinity, has composed three songs in Manipravalam.
 
“Sree Abhayamba ninnu’in Sri Ragam is one in which he has employed three languages Sanskrit, Tamil and Telugu. This combination is called MANIPRAVALA HIRAM. Such a composition is in an enhanced version of Manipravalam is Manipravalahiram, where hiram means diamond. three languages and therefore star studded.
 
Sri Venkatachalapate’ in Karnataka Kapi raga is another popular one which is also a
 
‘Sri Maharajni’ in Karnataka Kapi is the third one.
 
Generally Sanskrit and Telugu are blended in some of his kritis
 
Two of the songs are Ni Samana in raga Bhairavi
 
H.H.Swati Thirunal Maharaj
 
Sri Tyagaraja Swami Mahimanu-
 
One of the most popular composer and erstwhile Maharaja of Travancore from Kerala. Having composed innumerable songs in various languages especially in Sanskrit, with impressive Manipravalam songs using Malayalam, Tamil and Telugu. Among the many composers Swathi Thirunal seems to have scored the most in Manipravalam. Among his compositions are Group kritis, out of which are a set of Utsava Prabhanda kritis comprising twelve songs with 42 verses in Manipravalam. The vrittams preceding the kritis are also in Manipravalam. He has composed Manipravala kritis using Malayalam and Sanskrit as Mani and Pravala.
இசையெனும் தவம்
 
தஞ்சாவூர் ஸ்ரீமதி ஜெயந்தி கண்ணன்
 
ஆதி சங்கரர் மனத்தையும், புலன்களையும் அடக்குவது தான் தவம் என்கிறார். அதாவது மனதையும் புலன்களையும் வசப்படுத்தி, நம்முள் ஆழ்ந்து பார்த்தால், நம்மைப் பற்றிய, பிரபஞ்சத்தைப் பற்றிய, இறைவனைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் அறிய முடியும்.
 
தைத்திரீய உபநிஷத்தின் மூன்றாவது அத்யாயத்தில், பிருகு, தன் தந்தை வருணரிடம், “கடவுள் என்பவர் யார்?” எனக்கு உபதேசியுங்கள் எனக் கோட்டான். அதற்கு அவர் “தவமே கடவுள், தவத்தால் அவரை அடையாலம்” என்று சொன்னார். அதன்பின் பிருகு தவத்தில் ஈடுபட்டான். தவத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு உண்மையைக் கண்டான். தவத்தின் இறுதி நிலையான பிரும்மத்தைக் கண்டுகொள்ள, அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய நிலைகளைக் கடக்க வேண்டியிருந்தது. கடைசி நிலையான ஆனந்தமய நிலையை அடைந்தபோது, பிரம்மத்தை அறிந்து கொண்டு, பிரம்மத்திலேயே நிலை பெற்றான்.
 
சில நேரங்களில் நாம் எல்லாவற்றையும் மறந்து ஆனந்த நிலையில் திளைப்பது உண்டு. இந்த ஐந்து நிலைகளையும் கடந்தது தான் ஆன்மா. இந்த ஆன்மா – பிரம்மம் அந்தர்யாமிதான் சிருஷ்டியனைத்துள்ளும் உறைகிறது. “தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளிசேர் மூவுலகத்தானாய் வானாய் தன்னாலே தன்னுருவின் மூர்த்தி மூன்றாய்” என்று திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் அருளிச் செய்கிறார். நான் பிறப்பேனாக, நான் பலவாக ஆவேனாக என்று இறைவன் விரும்பினார். அதற்காகத் தன் உருவிலிருந்து மூன்று மூர்த்திகளை வெளியிட்டவனாய்த் தானே கண்ணனாய்த் திருவவதாரம் செய்தார். தவத்தால் உலகம் அனைத்தையும் படைத்தார். படைத்த பிறகு படைப்பிலும் அவரே நிறைந்தார். எது தானே உருவாக்கிக் கொண்டதோ அதுவே ஆனந்த ரஸம், இதனை அடைந்தவன் தான் உண்மையான ரஸம் உள்ளவனாகிறான். இது பிரும்மானந்த ரஸம். இத்தகைய ஆனந்த மய நிலையை அடைவதற்கு மனமும், புலன்களும் ஆன்மாவில் லயிக்க வேண்டும். ஆன்மாவுக்கு இசைவாக, இருக்க வேண்டும். பிருகுவைப் போலக் கடுமையான தவம் செய்து இறுதியில் கடவுளைக் காண முயல வேண்டும். அதற்கு நமக்குக் காலமும், ஞானமும் வேண்டும்.
 
காலம், “மின்னின் நிலை இல” – மின்னலைக் காட்டிலும் மிகக் குறுகிய கால அவகாசமே கொண்டது நம் மானுட வாழ்க்கை என்பது நம்மாழ்வார் வாக்கு. அந்தக் கால அவகாசத்துக்குள் தவம் செய்வது என்பது இயலாது ஒன்று.
 
 
அடுத்து ஞானம் என்பது நமக்கு இறைவனால் வழங்கப்பட வேண்டும். அறிவை நம் புறச் செயல்களிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். “ஜ்ஞாநமு ஒஸகராதா” ஞானத்தை அளிக்க மாட்டாயா? என்று தியாக பிரம்மம் கேட்பது போல் ஞானம் இறைவனால் அளிக்கப்பட வேண்டும். “ஸங்கீத ஜ்ஞாநமு தாத வ்ராய வலெரா” என்கிற கிருதியில், ஜீவன் முக்தி நிலையை அடைய வேண்டுமாயின் ஸங்கீத ஞானத்தை பிரம்மன் ஒருவனுடைய நெற்றியில் எழுத வேண்டும் என்றும் தியாக பிரம்மம் கூறுகிறார். மேலும் அதே கிருதியில், அப்படி வழங்கப்பட்டஞானத்தினால் தான் பிரம்மத்திற்கு ஆகாசமே சரீரம் அதில் உலகங்கள் சேதன வஸ்துக்களாக விளங்குகின்றன என்பதையும், இவற்றை நம் உள்ளத்தில் உறையும் ஆத்மா ராமனுடன் ஒன்றாக பாவித்து நாதோபாசனையின் மூலம் கண்டு கொள்ளலாம் என்றும் தியாகப் பிரம்மம் உறுதியாகக் கூறுகிறார்.
 
இவையனைத்தையும் விட மிக எளிமையான வழியாக வராஹ சரம ஸ்லோகத்தில், “எவன் உடம்பிலே பலம், புஷ்டி, தேஜஸ், மனஸ் இவை நல்ல முறையில் இருக்கிற போதே என்னுடைய திருநாமத்தை உரக்கச் சொல்கிறானோ அவன் என்னால் இரஷிக்கப்படுகிறான்” என்று இறைவனே சொல்கிறார். இதே எளிமையான உபாயத்தை தன் மற்றொரு கிருதியில் “மனமென்னும் பொற்பீடத்தில் இராமசந்திர மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து சிவ, ராம எனும் நாமங்களென்னும் மலர்களால் அர்ச்சனை செய்யும் நரஜன்மமே உயர்ந்த ஜன்மமாகும் என்கிறார் தியாகப்பிரும்மம். தவம் என்பது ஒருவர் தானாக மேற்கொள்வது. அதுபோல ராமபக்தி என்னும் ஸாம்ராஜ்யத்தை அடையச் செய்யும் ப்ரும்மானந்தமும் ஒவ்வொருவரும் தாமாக அனுபவித்துப் பெறக்கூடியது. அந்த அனுபவம் கிடைக்கப் பெற்று, ஸ்ரீராமனின் தரிசனத்தைக் கண்ட ஸ்ரீதியாகப் பிரும்மத்தின் வாக்கு நமக்கெல்லாம் இசையாலே, நாதோபாஸனை எனும் தவத்தாலே இறைவனை அடைய வழிகாட்டுகிறது.
 
ஸ்ரீ தியாகபிரும்மம் கிருதிகள் அனைத்திலுமே, இறைவனுடன் உரையாடி, உறவாடி, போற்றி, தூஷித்து, இறைஞ்சி மனதால் இறைவனுடன் லயித்து ஸ்ரீராமனிடம் சிந்தையை நிறுத்தி, பிரம்மத்தைத் தரிசித்து, பிரம்மானந்தமய நிலையை அடையும் உபாயமாக இசையே தவமெனக் காட்டுகிறார்.